உத்தரபிரதேசம்: லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2021 10:37 PM GMT (Updated: 20 Jan 2021 10:37 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் வங்கியில் ரூ.4,300 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சில நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கில் அந்த நிறுவனங்களுக்கு உதவுவதற்காக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே.ரிஷி, இன்ஸ்பெக்டர் கபில் தன்காட் மற்றும் வக்கீல் ஒருவரும் லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே.ரிஷியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Next Story