தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை + "||" + Suicide of a farmer who fought against agricultural laws

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாய பிரதிநிதிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், டெல்லியின் திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜெய் பக்வான் ராணா (வயது42) என்ற விவசாயி நேற்று திடீரென ஷல்பாஸ் என்ற விஷமாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால் இதை இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பிரச்சினை என மத்திய அரசு கூறுகிறது. விவசாயிகள் போராட்டம் இன்னும் ஒரு இயக்கமாக மாறாதது துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாபை சேர்ந்த வக்கீல் ஒருவரும், சந்த் ராம்சிங் என்ற சீக்கிய மதகுருவும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
2. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.
3. தடை செய்யப்பட்டவை காண்பிக்கப்பட்டிருந்தால் தவறானது: விவசாய சங்க தலைவர் திகாய்த்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்திய நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில் கட்டப்பட்டிருந்த கொடி சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை
மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என சரத் பவார் கூறியுள்ளார்.
5. விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; வேளாண் துறை அமைச்சர்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.