தேசிய செய்திகள்

குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம்; வருவாய் அதிகாரி கைது + "||" + Rs 25 lakh bribe in Gujarat; Revenue officer arrested

குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம்; வருவாய் அதிகாரி கைது

குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம்; வருவாய் அதிகாரி கைது
குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ஆமதாபாத், 

குஜராத்தின் டோல்கா தாலுகாவில் பதார்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது நிலத்திற்கான ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது வருவாய் அதிகாரியும், அவரது உதவியாளரும் நிலத்தை அளந்து, திருத்தம் செய்து ஒப்புதல் வழங்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார், வருவாய் அதிகாரியையும், உதவியாளரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி நிலத்துக்காரர் பணம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். வருவாய் அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சமும், உதவியாளரிடம் இருந்து 5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
குஜராத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
4. குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
குஜராத், அசாமில் காலியாக உள்ள 3 மேல்சபை இடங்களுக்கு இடைத்தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5. மின் இணைப்பு வழங்க இடைத்தரகர் மூலம் லஞ்சம்: பேரம் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோவையில் மின் இணைப்பு வழங்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பேரம் பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.