தேசிய செய்திகள்

3 மாநிலங்கள் உதய நாள் - பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Tripura, Meghalaya and Manipur are separate states Prime Minister Modi Greeting

3 மாநிலங்கள் உதய நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

3 மாநிலங்கள் உதய நாள் - பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவில் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் தனி மாநிலங்களாக உதயமான தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் தனி மாநிலங்களாக உதயமான தினம் இன்று ஜனவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று மாநில உதய நாள் கொண்டாடும் மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

”மணிப்பூர் மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள். புதுமை மற்றும் விளையாட்டு திறமைகளின் சக்தியாக மணிப்பூர் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கான மணிப்பூர் மாநிலத்தின் பங்கு பெருமைக்குரியது. 

திரிபுரா மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள். திரிபுரா மக்களின் கலாச்சாரம் மற்றும் அன்பு இந்தியா முழுவதும் போற்றப்படுகிறது. திரிபுரா மாநிலம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. 

மேகாலயா சகோதரிகள், சகோதரர்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள்.மேகாலயா மாநில இளைஞர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திரிபுரா காங். தலைவர் கார் மீது தாக்குதல்- பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
2. 'திரிபுரா முதல்-மந்திரி ஒரு குட்டி ஹிட்லர்’ கம்யூனிஸ்டு கட்சி கடும் விமர்சனம்
திரிபுரா முதல் மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் என கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.