இந்தியாவில் 145 பேருக்கு உருமாறிய கொரோனா - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jan 2021 7:14 PM GMT (Updated: 21 Jan 2021 7:14 PM GMT)

இந்தியாவில் 145 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இங்கிலாந்தில் உருவாகி பரவி வருகிற உருமாறிய கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவையும் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.

இங்கு இதுவரை 145 பேரை இந்த உருமாறிய கொரோனா தாக்கி உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு பயணித்தவர்கள், குடும்ப தொடர்புகள், பிறருடனான தொடர்புகள் என விரிவான தொடர்பு தடமறிதல் தொடங்கப்பட்டுள்ளது. நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story