கோவேக்சின்’ தடுப்பூசி பாதுகாப்பானது; ஆய்வில் கண்டுபிடிப்பு


கோவேக்சின்’ தடுப்பூசி பாதுகாப்பானது; ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2021 8:24 PM GMT (Updated: 22 Jan 2021 8:24 PM GMT)

கோவேக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து முதல்கட்ட ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 11 ஆஸ்பத்திரிகளில் இந்த ஆய்வு நடந்தது.

புதுடெல்லி,

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது கொரோனா தடுப்பூசியான ‘கோவேக்சின்’ அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை தற்போதுதான் நடந்து வருகிறது. அதனால், அதன் பாதுகாப்பு குறித்து பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கோவேக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து முதல்கட்ட ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 11 ஆஸ்பத்திரிகளில் இந்த ஆய்வு நடந்தது. 18 முதல் 55 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான 375 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு 14 நாள் இடைவெளியில் 2 டோஸ் கோவேக்சின் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில், ஊசி போட்ட இடத்தில் வலி என்ற பொதுவான பக்கவிளைவுதான் இருந்தது.

சிலருக்கு காய்ச்சல், சோர்வு, தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகள் காணப்பட்டன. யாருக்கும் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. அதனால், கோவேக்சின், பாதுகாப்பான, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தடுப்பூசி என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story