தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மந்திரிக்கு கொரோனா உறுதி + "||" + Minister Test positive

உத்தரபிரதேசத்தில் மந்திரிக்கு கொரோனா உறுதி

உத்தரபிரதேசத்தில் மந்திரிக்கு கொரோனா உறுதி
உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை வரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 597 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பல்,

உத்தரபிரதேச மாநிலத்தில் இடைநிலை கல்வித் துறை மந்திரியாக இருப்பவர் குலாப் தேவி. சந்தவுசி தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்று மந்திரியாக பொறுப்பேற்றவர். நேற்றைய தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற தொடங்கி உள்ளார்.

“2 நாட்களாக எனக்கு இருமல் இருந்து வந்தது. நான் பரிசோதனை செய்துகொண்டபோது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நான் நலம் பெற்று, விரைவில் பொது சேவைப் பணிக்கு திரும்புவேன்” என்று கூறி உள்ளார். உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை வரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 597 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த்
கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
2. வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக மந்திரி
ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் கொரோனா தடுப்பூசியை வீட்டில் வைத்து போட்டு கொண்ட கர்நாடக மந்திரி பி.சி.பட்டீலால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
3. கொரோனா தடுப்பூசிக்கு இதுவரை 50 லட்சம் பேர் பதிவு
கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
4. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இந்த ஊசி போடப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை