தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் தேவை; மேற்கு வங்காள முதல் மந்திரி பேச்சு + "||" + India needs 4 capitals in rotation; WB CM talks

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் தேவை; மேற்கு வங்காள முதல் மந்திரி பேச்சு

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் தேவை; மேற்கு வங்காள முதல் மந்திரி பேச்சு
இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் தேவை என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
கொல்கத்தா,

இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்பொழுது, நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவம் என்றொரு அமைப்பினை உருவாக்கி அதில், குஜராத், வங்காளம் மற்றும் தமிழகம் உள்பட ஒவ்வொரு மக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டார்.  பிரிட்டிஷாரின் நம்மை பிரித்து, ஆட்சி செய்யும் கொள்கைக்கு எதிராக நின்றவர் என்று கூறினார்.

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் கட்டாயம் தேவை.  இங்கிலாந்து ஆட்சியாளர்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டு இந்தியா முழுவதும் ஆட்சி செய்தனர்.  நம்முடைய நாட்டில் ஏன் ஒரே ஒரு தலைநகரம் இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தேசநாயகர் தினம் என்று நாம் இன்று கொண்டாடி வருகிறோம்.  ஏனெனில் நேதாஜியை ரவீந்திரநாத் தாகூர் தேசநாயகர் என அழைத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இல்ல தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம்; பிரியங்கா காந்தி பேச்சு
அசாம் தேர்தல் பிரசார கூட்டத்தில் இல்ல தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
2. தமிழக கலாசாரத்தை சிறுமைப்படுத்த நினைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் ராகுல்காந்தி பேச்சு
பா.ஜனதாவை தமிழகத்தில் நுழைய விட்டு விடாதீர்கள் என்றும், தமிழ்மொழி, கலாசாரத்தை சிறுமைப்படுத்த நினைப்பவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி கூறினார்.
3. ‘ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகள் மூலம் சமூகநீதியை காக்க முடியாது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
வேஷம் போடுபவர்களை மக்கள் நம்பக்கூடாது என்றும், ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியை காக்க முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் பிருந்தாகாரத் பேச்சு
மக்கள் நலனுக்காக செயல்படும் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் பிருந்தாகாரத் பேச்சு.
5. தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசு அமைய வேண்டும் ராகுல்காந்தி பேச்சு
மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்றும், தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசு அமைய வேண்டும் என்றும் ராகுல்காந்தி பரபரப்பாக பேசினார்.