தேசிய செய்திகள்

நேதாஜியின் வாழ்க்கை, பணி, முடிவுகள் நமக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு + "||" + Netaji's life, work, decisions will inspire us: PM Modi's speech

நேதாஜியின் வாழ்க்கை, பணி, முடிவுகள் நமக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

நேதாஜியின் வாழ்க்கை, பணி, முடிவுகள் நமக்கு உத்வேகம் அளிக்கும்:  பிரதமர் மோடி பேச்சு
இந்தியா பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவி செய்வதனை கண்டால் நேதாஜி பெருமை கொள்வார் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கொல்கத்தா,

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அவரை கவுரவிக்கும் வகையில், அரசு சார்பில் பராக்கிரம திவாஸ் எனப்படும் துணிச்சல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்துள்ளார்.  பின்னர் கொல்கத்தாவிலுள்ள நேதாஜி பவன் மற்றும் தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு சென்றார்.  நூலகத்தில் இருந்த கலைஞர்கள் மற்றும் சிறப்பு குழுவினரிடம் பிரதமர் உரையாடினார்.

இதன்பின்பு கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா நினைவகத்திற்கு அவர் சென்றார்.  அவரை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜக்தீப் தங்கார் வரவேற்றனர்.  இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன்பின்னர் அவர் கூட்டத்தின் முன் பேசும்பொழுது, நேதாஜியின் வாழ்க்கை, அவரது பணி மற்றும் முடிவுகள் நம் அனைவருக்கும் உத்வேகம் ஏற்படுத்தும்.  அதுபோன்ற தீர்க்கமான உறுதியுடன் உள்ள ஒரு நபருக்கு சாத்தியமில்லாதது என எதுவும் இல்லை.

நேதாஜி அவர்கள் ஏழ்மை, கல்வியறிவு இன்மை, நோய் ஆகியவற்றை நாட்டின் மிக பெரிய பிரச்னைகளாக கணக்கிடுவது வழக்கம்.  சமூகம் ஒன்றுபட்டால் இந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

நேதாஜியால் கற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தினை அசல் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வரை உலக நாடுகள் சான்று அளித்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் இறையாண்மைக்கு எங்கெல்லாம் சவால் விடும் முயற்சிகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் நாடு சரியான பதிலடி கொடுத்து வருகிறது.  இந்தியா பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி எப்படி உதவி வருகிறது என நேதாஜி அவர்கள் பார்த்தால் பெருமை கொள்வார் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி துணை நிற்கும் மத்திய மந்திரி பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மீண்டும் வரவிருக்கிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) துணை நிற்கும் என்று சென்னையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அதுவாலே கூறினார்.
2. வாஜ்பாய் அரசுக்கு புரட்சி தலைவி முழுமனதுடன் வழங்கிய ஆதரவை பா.ஜ.க. மறக்காது; மத்திய மந்திரி பேச்சு
வாஜ்பாயின் முதல் அரசுக்கு, தமிழகத்தின் மகள் புரட்சி தலைவி அவர்கள் முழுமனதுடன் வழங்கிய ஆதரவை பா.ஜ.க.வால் மறக்க முடியாது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
3. கொரோனாவுக்கு பின் நாட்டின் அடுத்த வளர்ச்சி கதையை எழுத போகிறோம்; மத்திய மந்திரி பேச்சு
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், இந்தியாவின் அடுத்த வளர்ச்சி கதையை நாம் எழுத போகிறோம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
4. இலவச மின், கியாஸ் இணைப்பு, சுகாதார வசதிகள்; ஏழைகள் வாழ்வில் மாற்றங்கள்: பிரதமர் மோடி உரை
இலவச மின், கியாஸ் இணைப்பு மற்றும் சுகாதார வசதிகளால் ஏழைகள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
5. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு
ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு புதிய தேசிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.