கொரோனா தடுப்பூசி: கடந்த 2 நாட்களில் 13 நாடுகளுக்கு பயிற்சி மத்திய அரசு


கொரோனா தடுப்பூசி:  கடந்த 2 நாட்களில் 13 நாடுகளுக்கு பயிற்சி மத்திய அரசு
x
தினத்தந்தி 23 Jan 2021 3:50 PM GMT (Updated: 23 Jan 2021 3:50 PM GMT)

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி பற்றி கடந்த 2 நாட்களில் 13 நாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் கடந்த 16ந்தேதி முதல் நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.  இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று மாலை 6 மணிவரையில், மொத்தம் 27,776 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இதுவரை 15.37 லட்சம் பயனாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  பஹ்ரைன், வங்காளதேசம், பூடான், பிரேசில், மாலத்தீவுகள், மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், செசலிஸ் மற்றும் இலங்கை ஆகிய 13 நாடுகளை சேர்ந்த எதிர்ப்பு சக்தி திட்டத்திற்கான மேலாளர்களுக்கு கடந்த 2 நாட்களாக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியானது தற்பொழுதுள்ள 12 மாநிலங்களுடன் கூடுதலாக 7 புதிய மாநிலங்களுக்கு அடுத்த வாரம் முதல் போடப்படும்.  இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 56 வயது பெண் ஒருவர் குருகிராம் பகுதியில் உயிரிழந்து உள்ளார்.  எந்தவொரு மரணமும் கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புடையவை அல்ல என்று அமைச்சக கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறியுள்ளார்.

Next Story