தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் - சம்பிரதாய அல்வா கிண்டும் நிகழ்ச்சி + "||" + Finance Minister Nirmala Sitharaman launched 'Union Budget

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் - சம்பிரதாய அல்வா கிண்டும் நிகழ்ச்சி

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் - சம்பிரதாய அல்வா கிண்டும் நிகழ்ச்சி
2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யவதற்கு முன் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது ஊழியர்கள் மற்றும் அதிகரிகளுக்கு அல்வா வழங்கும் நிகழ்ச்சியில் நிதி மந்திரி அல்வா கிண்டி வழங்குவது வழக்கம்.

2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் பட்ஜெட் தொடர்பான புத்தகங்கள் அச்சடிக்கப்படும் முன்பு சம்பிரதாயமாக நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா கிண்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத்திய மந்திரி அனுராக் தாகூர், நிதியமைச்சக  உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொரோனாவால் இந்த ஆண்டு பட்ஜெட் உரை, பொருளாதார ஆய்வறிக்கை  தொடர்பான புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.