கேரளாவில் மேலும் 6,960- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 6,960- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Jan 2021 5:52 PM GMT (Updated: 23 Jan 2021 5:52 PM GMT)

கேரளாவில் மேலும் 6,960- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மேலும் 6,960- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,283- பேர் குணம் அடைந்துள்ளனர். 

மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 048- ஆக உள்ளது.  கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 08 ஆயிரத்து 377- ஆக உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரு நாளில் மட்டும் 23- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 587- ஆக உள்ளது. 

Next Story