இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2021 9:00 AM GMT (Updated: 24 Jan 2021 9:00 AM GMT)

இந்தியா முழுவதும் இதுவரை 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ என்ற 2 தடுப்பூசிகள் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய இந்த தடுப்பூசி திட்டம் கடந்த ஒரு வாரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நேற்று சுமார் 14 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி இருந்தது. 

இந்நிலையில் இந்தியா முழுவதும் எட்டாம் நாளான இன்று இதுவரை 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 27,776 முகாம்களில் 15,82,201 சுகாதார பணியாளர்களுக்கு இன்று காலை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட 123 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story