தேசிய செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து + "||" + National Girl Child Day

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

''தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று, பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் நம் நாட்டு திருமகள்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், போதியக் கல்வி, நல்ல சுகாதாரம், பாலின பாகுபாடற்ற அக்கறை ஆகியவற்றை வழங்க மத்திய‌ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.