தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு + "||" + An Indian Security Force Personnal succumbed to his injuries in ceasefire violation by Pakistan

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
காஷ்மீர் எல்லையில் கடந்த 18-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய படையினரை குறிவைத்து மோட்டார் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்திய படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பனி என்ற பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே ஜம்முகாஷ்மீர் ராஷ்டிரிய ரைபில் படைப்பிரிவை சேர்ந்த இந்திய பாதுகாப்பு படைவீரர் நிஷாந்த் சர்மா பாதுகாப்பு பணியில் ஈடுக்கொண்டிருந்தார்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் நிஷாந்த் சர்மா படுகாயமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சிகிச்சைபெற்றுவந்தநிலையில் நிஷாந்த் சர்மா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - தேவஸ்தான தலைவர் பேட்டி
காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.
4. காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
5. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.