தேசிய செய்திகள்

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு + "||" + Corona vaccine assistance to many countries

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவி செய்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பல நாடுகளுக்கு நன்கொடையாகவும், மானியமாகவும் அளித்து வருகிறது.

அந்தவகையில் பூட்டான், மாைலத்தீவுகள், நேபாளம், வங்காளதேசம், மொரீசியஸ், மியான்மர், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானியமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு விரைவில் வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு தனது டுவிட்டர் தளத்தில், தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி, உலக சுகாதாரத்தில் பங்காற்றி வரும் இந்தியாவை நாங்கள் பாராட்டுகிறோம்.  ஓர் உண்மையான நண்பனாக, சர்வதேச சமூகத்துக்கு தனது மருத்துவ துறையை இந்தியா பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது
2. ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. அமீரகத்தில், ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - புதிதாக 2,721 பேருக்கு தொற்று
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்
அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
5. 2024-அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை