இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம் + "||" + Several countries have shown interest in procuring Tejas aircraft: HAL chairman Madhavan
இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம்
இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.
புதுடெல்லி,
தேஜாஸ் போர் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.மாதவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர, “தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு பல நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் முதல் ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை வழங்குவது என்பது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும். இப்படி வழங்கி முடிக்கும் வரையில் ஆண்டுக்கு 16 பேர் விமானங்கள் தயாரித்து முடிக்கப்படும்” எனவும் கூறினார்.
சீனாவின் ஜேஎப்-17 போர் விமானத்தைக் காட்டிலும், தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானம் சிறந்த செயல்திறனை கொண்டிருப்பதாகவும், சிறந்த எந்திரம், ரேடார் அமைப்பு மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-இ்ங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தொடரை வசப்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் உத்வேகத்துடன் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.