தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல்: சீனாவுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம் + "||" + Arunachal BJP Burns Effigy Of Xi Jinping Over Chinese Village

அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல்: சீனாவுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்

அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல்: சீனாவுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்
சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைகளைஎரித்து தங்கள் எதிர்ப்பை பாஜகவினர் பதிவு செய்தனர்.
இடாநகர், 

அருணாசல பிரதேசத்தில் இந்திய பகுதிக்குள் கிராமம் ஒன்றை சீனா அமைப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது இருநாட்டு உறவில் மீண்டும் புகைச்சலை கிளப்பி இருக்கிறது. சீனாவின் இந்த அத்துமீறலை கண்டித்து அருணாசல பிரதேச பா.ஜனதாவினர் தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ‘பாரத் மாதாகி ஜே’, ‘திரும்பிப்போ சீனா’ என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

மேலும் சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைகளையும் அவர்கள் எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் தேச்சி நேச்சா கூறுகையில், ‘அருணாசல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்து வருகிறது. இனியும் அதுவே தொடரும்’ என்று கூறினார்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, புதிதாக சீனா ஆக்கிரமிப்பு எதிலும் ஈடுபடவில்லை எனக்கூறிய அவர், தற்போது பிரச்சினையில் அடிபடும் பகுதி ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆக்கிரமித்தது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் இன்று பா.ஜ.க. பிரசார கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் இது என்பதால் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. 20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது- திருமாவளவன்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
3. 2021-ம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டை 6.8% உயர்த்தியுள்ளது சீனா
பட்ஜெட்டில் 209 பில்லியன் டாலர் நிதியை சீனா தனது நாட்டு ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.
4. 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது.
5. அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் ?
அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை என்பன குறித்த பட்டியல்கள் வெளியாகியுள்ளது.