தேசிய செய்திகள்

சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல் + "||" + Sasikala to be released on 27th - Karnataka Prisons

சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல்

சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல்
சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு, 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல் நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்திருந்தது. மேலும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சுயமாக உணவு எடுத்துக்கொள்வதாகவும், உதவியோடு எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி; தமிழக சுகாதார அமைச்சகம் தகவல்
தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
2. சசிகலாவை சந்தித்த முதல் எம்.எல்.ஏ
சசிகலாவை இன்று எம்.எல்.ஏ தனியரசு , இயக்குனர் லிங்குசாமி - நடிகர் பிரபு ஆகியோர் சந்தித்தனர்
3. பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா
தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
4. தமிழக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் அரசியல் களம் , சசிகலாவுடன் சரத்குமார், சீமான் சந்திப்பு
சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
5. தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம்: சசிகலா
தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.