கர்நாடகாவில் மதியம் 2 மணிவரை 2.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது


கர்நாடகாவில் மதியம் 2 மணிவரை 2.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 25 Jan 2021 10:18 AM GMT (Updated: 25 Jan 2021 10:18 AM GMT)

கர்நாடகாவில் மதியம் 2 மணிவரை 2.06 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.  அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு கடந்த 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.  நாடு முழுவதும் முதற்கட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்பின்னர், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு தெரிவித்தது.  இதன்படி, கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மதியம் 2 மணிவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 577 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  இதனை கர்நாடக சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

Next Story