டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 148 பேருக்கு தொற்று உறுதி + "||" + Delhi reports 148 new #COVID19 cases, 190 recoveries and 5 deaths in the last 24 hours.
டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 148 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,34,072 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,813 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 190 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,21,565 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 1,694 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.