கர்நாடகாவில் இன்று 1,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் + "||" + Karnataka reported 375 new #COVID19 cases, 1036 discharges, and 3 deaths in the last 24 hours: State Health Department
கர்நாடகாவில் இன்று 1,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
கர்நாடகாவில் இன்று மேலும் 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகாவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று மேலும் 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,36,426 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,200 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1036 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,361 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 6,846 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலிசங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் பெண் கொடுத்த வினோத சம்பவம் பெலகாவியில் அரங்கேறி உள்ளது.