குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பு


குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2021 8:53 PM GMT (Updated: 25 Jan 2021 8:53 PM GMT)

72-வது குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள விஜய்சோ பகுதியைச் சுற்றி உள்ள 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள முக்கியமான மின்பகிர்மான நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளின் இடங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளான ஐ.டி.ஓ, யமுனா பிரிட்ஜ் மற்றும் சுப்பிரமணியம் பாரதி மார்க் பகுதியில் போலீசார் தீவிர கண்காப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காமல் இந்தியாவில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story