தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர் + "||" + Farmers protest live updates: Farmers protest will be over soon, says Tomar

விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்

விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்
விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம்  இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதனால், மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. 

இந் நிலையில் விவசாயிகள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், ''விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்'' என்றார்.ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாயிகள் தெரிவித்துதுள்ளனர். அதேவேளையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராடுவோம் - பிரியங்கா காந்தி
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
2. வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியது
வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது.
3. டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் விவசாய சங்கங்கள் அறிவிப்பு
மார்ச் 6ந்தேதி டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
4. விவசாயிகளின் நிலைமை குறித்து பாப் நட்சத்திரங்கள் காட்டும் அக்கறையை மத்திய அரசு காட்டவில்லை - ராகுல்காந்தி
விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என ராகுல்காந்தி கூறினார்.
5. பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை - பிரியங்கா காந்தி
பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.