கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், டேவிட்சன் உள்பட தமிழக போலீசார் 20 பேருக்கு ஜனாதிபதி விருது; மத்திய அரசு அறிவிப்பு + "||" + Presidential Award for 20 Tamil Nadu Policemen, including Commissioner Maheshkumar Agarwal and Davidson; Central Government Notice
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், டேவிட்சன் உள்பட தமிழக போலீசார் 20 பேருக்கு ஜனாதிபதி விருது; மத்திய அரசு அறிவிப்பு
குடியரசு தினவிழாவையொட்டி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட தமிழக போலீசார் 20 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி விருது
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் சிறப்பாக, மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி விருதுக்கான பெயர் பட்டியலில் தமிழக போலீஸ் துறையை சேர்ந்த 20 பேர் இடம் பெற்றுள்ளனா். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு:-
போலீஸ் கமிஷனர்
1. சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்.
2. டேவிட்சன் தேவாசீர்வாதம் - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. போலீஸ் அகாடமி.
3. மணிகண்டகுமார் - தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவை புதூர் இன்ஸ்பெக்டர்.
4. டி.எஸ்.அன்பு - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.
5. கபில்குமார் சி சரத்கார் - சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி.
6. சந்தோஷ்குமார் - நிர்வாக பிரிவு போலீஸ் ஐ.ஜி.
இன்ஸ்பெக்டர் சுகன்யா
7. ஜான்சன் - ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு, சேலம் மாவட்டம்.
8. ஜீவானந்தம் - பரங்கிமலை உதவி போலீஸ் கமிஷனர், சென்னை.
9. முரளி - துணை போலீஸ் சூப்பிரண்டு, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
10. கலைச்செல்வம், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு.
11. கந்தசாமி - சென்னை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்.
12. சிவசங்கரன் - மணிமுத்தாறு, சிறப்பு காவல்படை இன்ஸ்பெக்டர்.
13. சுகன்யா - சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் தேவேகவுடா கூறினார்.