கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 Jan 2021 11:59 PM GMT (Updated: 25 Jan 2021 11:59 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அவரது நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பும குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டது. இன்னமும் அவரை தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். 

அதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதியானால், அவரை டிஸ்சார்ஜ் செய்யவும் டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வாரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். 

அதனால் அவர் சென்னைக்கு சென்றாலும், 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வார் என்று கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது.

Next Story