தேசிய செய்திகள்

அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு + "||" + Additional Forces In Delhi After Amit Shah's Security Meet Over Clashes

அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில்  பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியில் போராடும் விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி, 

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் அரங்கேறின. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் சில இடங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவை டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து விளக்கினார்கள். அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளை தனது இல்லத்துக்கு அழைத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லி பாதுகாப்பு நிலவரத்தை அவர் ஆய்வும் செய்தார்.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடந்த மோதல் குறித்தும், வன்செயல்கள் குறித்தும் அமித்ஷாவிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். இதையடுத்து தலைநகரில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் அதிக அளவில் டெல்லியில் முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட உள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியதால் பதற்றம்
டெல்லியில் துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்கமுடியாமல் தோல்வியடைந்தவர் கெஜ்ரிவால் - மத்திய மந்திரி பேச்சு
டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்கமுடியாமல் தோல்வியடைந்த கெஜ்ரிவால் தற்போது வீடுவிடாக ரேஷன் பொருட்களை வழங்குவது பற்றி பேசுகிறார் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
4. மல்யுத்த வீரர் சாகர் ராண கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது
மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
5. டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.