நாடு முழுவதும் 20.39 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 26 Jan 2021 7:07 PM GMT (Updated: 26 Jan 2021 7:07 PM GMT)

நாடு முழுவதும் இதுவரை 20.39- லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல்  இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில், 26 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுபபூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 6 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story