கர்நாடகாவில் இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகாவில் இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jan 2021 4:07 PM GMT (Updated: 27 Jan 2021 4:07 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில குறைந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி கர்நாடகாவில் இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,37,383 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை 12,207 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 6,298 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 9,18,859 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story