டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 96 பேருக்கு தொற்று உறுதி


டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 96 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jan 2021 5:01 PM GMT (Updated: 27 Jan 2021 5:01 PM GMT)

டெல்லியில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,34,325 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை 10,829 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் தற்போது 1,501 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 6,21,995 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story