கொரோனா பரவல்: கட்டுப்பாடுகளை கடுமையாக்க கேரள அரசு முடிவு


கொரோனா பரவல்: கட்டுப்பாடுகளை கடுமையாக்க கேரள அரசு முடிவு
x
தினத்தந்தி 27 Jan 2021 8:43 PM GMT (Updated: 27 Jan 2021 8:43 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால், கொரோனா பரவலின் துவக்க காலத்தில்  பாதிப்பு மிக குறைவாக இருந்த கேரளாவில், தற்போது பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் மாநிலமாக தற்போது கேரளாவே உள்ளது.  மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கேரள  முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமயான கட்டுப்பாடுகளை விதிக்கவும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க காவல்துறையினரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், கொரோனா பரிசோதனைகளை தினசரி 1 லட்சம் வரை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.


Next Story