நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க் கட்சிகள் முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2021 9:28 AM GMT (Updated: 28 Jan 2021 12:10 PM GMT)

ஜனாதிபதி உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15 ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி  உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “நாங்கள் 16 அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறோம், நாங்கள் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதியின் உரையை புறக்கணிக்கிறோம். விவசாய மசோதாக்களை ( புதிய வேளாண் சட்டங்கள்) எதிர்க்கட்சி இல்லாமல் பலவந்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுதான், இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்” என்று தெரிவித்தார்.

Next Story