தேசிய செய்திகள்

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி + "||" + Six people including five from one family killed in Telangana auto-lorry crash

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில்  6 பேர் பலி
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், மண்டலத்தின் எர்ரகுந்தா தாண்டா மண்டலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை   சேர்ந்த 5 பேர்கள் ஆட்டோவில் வாரங்கலுக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.  மகாபூபாபாத் மாவட்டம் மாரிமிட்டா பகுதியில்  சென்று கொண்டு இருந்த போது பின்னால் இருந்து வந்த ஒரு லாரி ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லாரி டிரைவர்  தப்பி ஓடிவிட்டார். உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. விரைவில் அவரை பிடிப்போம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டியதால் விபத்து 3 பேர் பலி
மடியில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காரை ஓட்டியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
2. சிதம்பரம் அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி - 22 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அரசு குளிர்சாதன சொகுசுப் பஸ்ஸும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3. சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
4. விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி
விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
5. வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.