உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜஸ் மார்க்-2 விமானம் அடுத்த ஆண்டு அறிமுகம்


உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜஸ் மார்க்-2 விமானம் அடுத்த ஆண்டு அறிமுகம்
x
தினத்தந்தி 1 Feb 2021 2:19 AM IST (Updated: 1 Feb 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட் தேஜஸ் மார்க்-2 விமானத்தின் புதிய ரகம், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும், என எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் கூறியுள்ளார்.


புதுடெல்லி, 

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பன்முனை போர் விமானம், தேஜஸ் மார்க்-1ஏ. இதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேஜஸ் மார்க்-2 போர் விமானத்தை பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து வருகிறது. 

இதுகுறித்து அதன் தலைவர் மாதவன் கூறுகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதவாக்கில் இந்த விமானம் அறிமுகம் செய்யப்படும். அதன் அதிவேக சோதனை, 2023-ம் ஆண்டு மேற்கொள்ளப்படும். இந்த விமானம், சக்திவாய்ந்த என்ஜின்கள், பெரிய வடிவமைப்பு, அதிக சுமை தாங்கும் திறன், அடுத்த தலைமுறை மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தும் திறன் போன்ற சிறப்புகளை கொண்டது என்றார்.

Next Story