காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 3 பேர் கைது
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 3 பேரை ராணுவம் கைது செய்தது.
ஸ்ரீநகர்,
மத்திய காஷ்மீரின், பத்காமில், மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் ராணுவ படையினர் இணைந்து, தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கையெறி குண்டுகள், நான்கு டெட்டனேட்டர்கள், ஏ.கே.47 துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற வெடிபொருட்கள் மற்றும் செல்போன்கள், மிரட்டல் தொனி போஸ்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் மூவரும் லஸ்கர்-இ-தொய்பா மற்றும் தெக்ரிக-அல்-முஜாகிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட பத்காம், ஸ்ரீநகா் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர்களை தாக்கும் நோக்கத்துடன் திட்டம் தீட்டி செயல்பட்டு வந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story