மராட்டியத்தில் குடோன் இடிந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
மராட்டியத்தில் குடோன் ஒன்று இடிந்து விழுந்ததில் சிக்கி கொண்ட 7 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
புனே,
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் பிவண்டி நகரில் மன்கோலி பகுதியில் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த குடோன் திடீரென இன்று இடிந்து விழுந்தது.
அதற்குள் 7 பேர் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண் படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், குடோன் இடிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 5 பேர் காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Related Tags :
Next Story