அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை கோர்ட்டு சம்மன்
பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
மும்பை
பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
அவதூறு வழக்கு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை தொடர்ந்து, இ்ந்தி திரையுலகை பற்றி நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்தார். அப்போது நடிகர் ஹிருத்திக் ரோசனுடனான உறவு பிரச்சினையில் அமைதி காக்கும்படி தன்னை திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மிரட்டியதாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜாவித் அக்தர் திட்டவட்டமாக மறுத்தார். தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டிய அவர், இது தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பதிலளிக்கவில்லை
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த டிசம்பர் மாதம் ஜூகு போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி போலீசார் நடிகை கங்கனா ரணாவத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்தநிலையில் நேற்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை கங்கனா ரணாவத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சம்மன்
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, நடிகை கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.
பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story