பிரதமர் மோடி, பா.ஜ.க.வினருக்கு கொலை மிரட்டல் எம்.எல்.ஏ.வுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வந்த தகவலால் பரபரப்பு
எம்.எல்.ஏ.வுக்கு பாகிஸ்தான் நாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து ‘வாட்ஸ்-அப்’ மூலமாக கொலை மிரட்டல் வந்தது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. சரிதா பதவுரியா. இவருக்கு பாகிஸ்தான் நாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து ‘வாட்ஸ்-அப்’ மூலமாக கொலை மிரட்டல் வந்தது. அதில் ‘உன்னையும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொன்று விடுவோம்’ என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. அளித்த புகாரையடுத்து அவருக்கு தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இருப்பினும் தான் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார். சரிதா பதவுரியாவின் கணவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது. மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story