வடமாநிலங்களில் 3 நாட்களுக்கு கடும் குளிரலை வீசும்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


வடமாநிலங்களில் 3 நாட்களுக்கு கடும் குளிரலை வீசும்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2021 11:24 AM IST (Updated: 2 Feb 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

வடமாநிலங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடும் குளிரலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு பருவமழை பொழிவுக்கு பின் நாட்டில் குளிர்கால பருவநிலை தொடருகிறது.  இதனால், ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிக பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர்ந்த அலை வீசி வருகிறது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்திய பகுதியில் பிப்ரவரி 3-5 வரை 3 நாட்களுக்கு வானிலையில் ஈரப்பதம் நிலவும்.

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் ஈரப்பதமுடன் காணப்படும்.  மேற்கு இமயமலை பகுதிகளின் மீது 3 மற்றும் 4 ஆகிய நாட்களிலும், சமவெளி பகுதிகளில் 4 மற்றும் 5 ஆகிய நாட்களிலும் குளிர் உச்சநிலையை அடையும்.

இதேபோன்று 2ந்தேதி (இன்று) முதல் வடமேற்கு இந்தியாவில் இருந்து குளிரலை வீச தொடங்கும்.  பின்பு 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் உத்தர பிரதேசத்தின் கிழக்கு மற்றும் பீகாரில் அடர்பனி, குளிரலை மற்றும் நாள் முழுவதும் குளிர்நிலை ஆகியவை நிலவும் என தெரிவித்து உள்ளது.

Next Story