சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர்சிங் பாதல் கார் மீது கல் வீச்சு; காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
பஞ்சாப் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வருகிற 14-ந் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், அத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் தனது வேட்பாளர்களுடன் ஜலாலாபாத் தாசில்தார் அலுவல வளாகத்துக்கு சிரோமணி அகாலி தள கட்சித் தலைவர் சுக்பீர்சிங் பாதல் நேற்று சென்றார்.
அப்போது அவரது கார் மீது சிலர் கல் வீசித் தாக்கினர். அதில் 4 பேர் காயமடைந்தனர். சுக்பீர்சிங் பாதல் காயமின்றித் தப்பினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ரமீந்தர்சிங் ஆவ்லா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர்தான் தாக்குதல் நடத்தியதாக சுக்பீர்சிங் பாதலின் ஊடக ஆலோசகர் ஜங்வீர் சிங் குற்றம்சாட்டினார். அச்சம்பவத்தின்போது போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்ததாகவும் அவர் புகார் கூறினார். காங்கிரஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் தங்கள் கட்சித் தொண்டர்கள் இருவர் காயம் அடைந்ததாகவும் சிரோமணி அகாலி தள தலைவர் பரம்பன்ஸ்சிங் ரோமனா குற்றச்சாட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story