சத்தீஷ்காரில் தேடப்பட்ட பெண் நக்சலைட்டு கைது
சத்தீஷ்காரில் தேடப்பட்ட பெண் நக்சலைட்டு கைது செய்யப்பட்டார்,
பீஜாப்பூர்,
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கார் மாநிலம் பசகுடா பகுதியில் உள்ள பீஜாப்பூர்-சுக்மா எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவட்ட போலீசாரும், நக்சலைட்டு தடுப்பு படையினரும் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதம் பைசு என்ற 19 வயது இளம்பெண் நக்சலைட்டு ஒருவர் சிக்கினார். இவர் சுக்மா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்.
தடை செய்யப்பட்ட நக்சலைட்டுகளுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story