குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயாராகி வருகின்றன - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயாராகி வருகின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இங்கு வந்துள்ள இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்து குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் பற்றிய ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அதில் அவர் குடியுரிமை திருத்த சட்டம், 2019 பற்றிய அறிவிக்கை, 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின் விதிகள் தயாராகி வருகின்றன. இந்த விதிகளை வகுப்பதற்கான குழுக்களுக்கு மக்களவை ஏப்ரல் 9-ந் தேதி வரையும், மாநிலங்களவை ஜூலை 9-ந் தேதி வரையும் அவகாசம் வழங்கி உள்ளன என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story