மீனவர்கள் பிரச்சினை: மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்


மீனவர்கள் பிரச்சினை: மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்
x
தினத்தந்தி 3 Feb 2021 10:12 AM IST (Updated: 3 Feb 2021 10:12 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.

புதுடெல்லி,

தமிழக மீனவர்களை 2020 டிசம்பர் முதல் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜனவரி18ல் சென்ற மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்தது. இதில் நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் கண்டனம் வெளியிட்டார்.

தொடர்ந்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எழுப்பினர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. இலங்கை அரசிடம் இது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Next Story