கொரோனா பாதிப்பில்லாத யூனியன் பிரதேசமாக மாறியது அந்தமான் நிக்கோபார் தீவு


கொரோனா பாதிப்பில்லாத யூனியன் பிரதேசமாக மாறியது அந்தமான் நிக்கோபார் தீவு
x
தினத்தந்தி 3 Feb 2021 12:24 PM IST (Updated: 3 Feb 2021 12:24 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு தற்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 07 லட்சத்து 77 ஆயிரத்து 284- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 04 லட்சத்து 62 ஆயிரத்து 631- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 596- ஆகும். தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 057- சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்கள பணியாளர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 38 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா தொற்று தனது கோர முகத்தை காட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி இப்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த தீவில் கொரோனா தொற்றுடன் யாருமே இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு பேரும் பூரண குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமானில் மொத்தமாக 4994 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 4932 பேர் குணம் அடைந்துள்ளனர்.  62 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Next Story