எல்லையில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது: பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்
எல்லையில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பல முனைகளில் இருந்து இந்தியா அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது.
எல்லைகளில் சூழலை தன்னிச்சையாக மாற்ற படைகளை பயன்படுத்தும் துரதிர்ஷ்டவசமான முயற்சியை நாம் எதிர்கொள்கிறோம். எந்த விலை கொடுத்தாவது, நமது மக்களையும், பிராந்திய இறையாண்மையையும் பாதுகாக்கவும், எந்த சவாலையும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்க இந்தியா விழிப்புடன் தயாராக உள்ளது.
தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டை சேர்ந்த பெரிய மற்றும் கூட்டு பாதுகாப்பு தளவாட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில், ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பு துறையில் நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுபல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் நேரடியாகவும், பல நாடுகளின் அமைச்சர்கள் மெய்நிகர் முறையிலும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்” என்றார்.
Related Tags :
Next Story