ஜம்மு காஷ்மீரில் தற்போது யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை: உள்துறை அமைச்சகம்


ஜம்மு காஷ்மீரில் தற்போது யாரும் வீட்டுக்காவலில்  வைக்கப்படவில்லை: உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 3 Feb 2021 8:57 AM GMT (Updated: 3 Feb 2021 8:57 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் இன்றைய தேதியில் வீட்டுக்காவலில் யாரும் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 430 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும்  தற்போது யாருமே வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவயில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “ ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள், கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் என 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 

அவர்களில் இதுவரை 430 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர்கூட வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

Next Story