2 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்: பிரதமர் மோடி 7-ந்தேதி அசாம் பயணம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Feb 2021 7:35 PM GMT (Updated: 3 Feb 2021 7:35 PM GMT)

2 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி 7-ந்தேதி அசாமிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

கவுகாத்தி, 

அசாம் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 7ம் தேதி, பிஸ்வநாத் சராலி மற்றும் சாரைதியோவில் அமைந்துள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி திகியாஜூலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மேலும் மாநில பொதுப்பணித்துறையால் ‘அசாம் மாலா’ என்ற பெயரில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தவுள்ள சாலைப்பணிகளையும் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தப்பணி 15 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநில நிதி மந்திரி ஹிமந்தா பிஸ்வா தெரிவித்தார்.

முன்னதாக வருகிற 6-ந்தேதி அசாம் வரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 8 லட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அசாமில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது. மேலும் கடந்த 15 நாட்களில் அசாமுக்கு பிரதமர் மோடி 2-வது முறையாக செல்வது குறிப்பிடத்தக்கது.

Next Story