ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 4ஜி இணைய சேவை


ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 4ஜி இணைய சேவை
x
தினத்தந்தி 5 Feb 2021 6:26 PM GMT (Updated: 5 Feb 2021 6:26 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 4 ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. 
சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. 

 மத்திய அரசின் இந்த முடிவால் அங்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. இதனால், வதந்திகள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை 4 ஜி இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 2 ஜி இணைய சேவைகள் மட்டும் படிப்படியாக  வழங்கப்பட்டு வந்தது. 

 இந்நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்று 4 ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 4 ஜி சேவை கிடைக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 4 ஜி சேவை வழங்கப்பட்டிருப்பதை முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். 


Next Story