மத்திய பட்ஜெட்: விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல் - ராகுல் காந்தி விமர்சனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Feb 2021 4:17 AM GMT (Updated: 6 Feb 2021 4:17 AM GMT)

மத்திய அரசின் பட்ஜெட், விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி, 

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்களன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “நாட்டின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது அந்த துறை நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. ஆனால் மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டி, ஜிஎஸ்டி வரிச் சலுகை உட்பட எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை. குறு, சிறு தொழில் துறைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட், விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மோடியின் நட்பு மைய பட்ஜெட்டில், விவசாயிகள் பெட்ரோல் டீசலுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அவர்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்பட மாட்டாது. மூன்று விவசாய எதிர்ப்பு சட்டங்களால் நசுக்கப்பட்ட பின்னர், நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story