கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Feb 2021 5:27 PM GMT (Updated: 8 Feb 2021 5:27 PM GMT)

கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கர்நாடகா, டெல்லி மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,239 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,42,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,24,654 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 5,934 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,36,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் 3 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10,882 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,24,182 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story